Salem Sanjeevarayanpet(mel seddu)Sri Ramalinga Sowdeswari Fest 2015
Saturday, 17 January 2015
Wednesday, 14 January 2015
Friday, 26 December 2014
Friday, 5 December 2014
Sunday, 10 August 2014
Tuesday, 1 July 2014
தேவலர் தேவதத்தை மணம் :
திருக்கயிலையில் சிவபெருமான் தேவலருக்கு மணஞ்செய்து வைக்கத் திருவுளம் பற்றினார். ஏழு முனிவர்களை - சப்தரிஷிகள் கயிலைக்கு வந்து சேருமாறு திருவுளத்தே எண்ணினார். முனிவர்கள் எழுவரும் இறைவனின் உள்ளக் குறிப்பை உணர்ந்து திருக்கயிலையை அடைந்து சிவபெருமான் திருமுன் போய் அவன் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி நின்றனர். வந்த முனிவர்களை நோக்கிச் சிவபெருமான் " முனிவர்களே! தேவாங்க முனிவருக்குச் சூரிய தேவனின் தங்கையை மணமுடிக்க வேண்டும். நீங்கள் சூரியதேவனிடம் சென்று மணவினைக்குரிய நன்னாளைக்கூறி, அவனது ஒப்புதலைப் பெற்று வாருங்கள்!" என்று பணித்தார். முனிவர்களும் சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சூரிய உலகம் சென்றனர். சூரியபகவானை அணுகி, வந்த காரியத்தைச் சொல்ல அவனும் தன் சம்மதத்தை மகிழ்ச்சியோடு அளித்தான். வைகாசித் திங்கள் பூர்வபட்சம் சத்தமி நாள் புதன் கிழமையன்று ஆறு நாழிகைக்கு மேல் முகூர்த்த நாளைக் குறித்தனர். இம்முடிவை முனிவர்கள் கயிலைக்குச் சென்று சிவபெருமானிடம் சொல்லி விட்டு அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தம் தம் இடம் ஏகினர். சூரியன் தன் தங்கை தேவதத்தையின் திருமணத்தை பற்றிய செய்திகளை எல்லாம் தனது அமைச்சன் வீரமார்த்தாண்டனிடம் சொல்லி, இம்மங்கல முடிவை ஆமோத நகரம் சென்று தேவாங்க மன்னனுக்கு அறிவித்து அவரை குறித்த மணநாளில் மணமுடிக்க உற்றார் உறவினருடன் சூரிய உலகம் வருமாறு கூறி, அழைப்பை விடுத்துத் திரும்பும்படி அனுப்பினான். அமைச்சன் மார்த்தாண்டனும் தேவாங்க மன்னனிடம் சென்று மணவினைபற்றிய முடிவுகளைச் சொல்லி குறித்த நாளில் சூரிய உலகம் வந்து சேருமாறு கூறி, விடை பெற்றுக்கொண்டு சூரிய உலகம் மீண்டான். சூரியனிடம் தான் ஆமோத நகரம் போய் வந்த விபரங்களைச் சொன்னான். உடனே சூரியன் மயனைக் கொண்டு இரத்தினங்களால் ஆன திருமண மண்டபத்தை அமைத்தான். முளைப்பாலிகைகள் தோற்றுவித்தான். நகரைத் தோரணங்களால் அழகுபடுத்தினான். வரும் விருந்தினர் தகுதிக்கேற்றவாறு தங்குவதற்கு வசதி மிக்க மாளிகைகளை நிர்மானித்தான். பின் சிவபெருமானுக்கும் திருமால் நான்முகனுக்கும் மற்றுமுள்ள தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தூதர்கள் மூலம் திருமண அழைப்பை அனுப்பினான். அழைப்பை ஏற்ற எல்லா தேவர்களும் தம் தம் பரிவாரங்களுடன் திருமணங் காண சூரிய உலகம் வந்து கூடினர். தேவாங்க மன்னனும் தனது திருமணத்துக்கு வருமாறு திருமண திருமுகத்தை உலக மன்னர்கள் யாவருக்கும் அனுப்பினார். அழைப்பை பெற்ற எல்லா மன்னர்களும் உரிய காலத்தில் அமைச்சர்கள் புடைசூழ ஆமோதநகரை வந்தடைந்தனர். அவர்களை எல்லாம் தேவாங்க மன்னன் தக்கவாறு வரவேற்று விருந்து முதலியன வைத்து உபசரித்து அமர்த்தினார். நல்லநேரத்தில் மன்னர்களும் நால்வகைப் படையினரும், விருதுகள் பலரும் ஏந்த, எக்காளம் துந்துபி பேரிகை முதலியன முழங்க, வாத்தியங்கள் ஒழிக்க அழகிய பெண்கள் ஆடல் பாடல் நிகழ்த்த தேர்மீது அமர்ந்து சூரியவுலகம் வந்தடைந்தார். சூரிய தேவன் மணமகனைத் தக்கவாறு வரவேற்று திருமணமண்டபத்துக்கு அழைத்துச் சென்றான். மணமகன் மணக்கோலம் பூண்டு மனையில் அமர்ந்தான். அழகில் தனக்கு நிகர் தானே என விளங்கிய தேவதத்தை இயற்கை அழகும் செயற்கை வனப்பும் பெற்று அன்னமென தேவமாதர்கள் புடைசூழ திருமணமண்டபம் வந்தடைந்தாள். மணமகன் அருகில் மனைமீது அமர்ந்தாள். பலவகை வாத்திய கீதங்கள் முழங்க, வேதகீதங்கள் ஒழிக்க தேவதத்தையின் கழுத்தில் தேவாங்க மன்னன் மங்கல நாண் சூட்டினார். அம்மை அப்பரும் சூழ்ந்திருந்த மற்ற தேவர்களும், முனிவர் முதலியோரும் மலர் தூவி வாழ்த்தி அருளினர். சூரிய பகவான் தாம்பூலத்தை எல்லோருக்கும் இரத்தினப் பேழைகளில் வைத்துக் கொடுத்தான். இந்நேரத்தில் தேவல மன்னன் தான் கொண்டு வந்திருந்த அழகான ஆடைகளை மூவருக்கும் அவர்கள் தேவிமார்களுக்கும், தேவர்களுக்கும் மன்னர்களுக்கும் ஆண் பெண் அனைவருக்கும் அவர்கள் மகிழுமாறு அளித்தார். அப்போது அங்கு வந்திருந்த பைரவக் கடவுளுக்கும் நல்லாடை ஒன்றை அளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட பைரவர் தேவலரைப் பார்த்து " எல்லோருக்கும் நல்ல நல்ல ஆடைகளைக் கொடுத்து விட்டு கடைசியில் மிஞ்சியிருந்த கழிசல் ஆடையை எனக்குக் கொடுத்தாயல்லவா ? இதோ இந்த ஆடையின் கதியைப் பார் " என்று சொல்லி அந்த ஆடையைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தார். அதற்குப் பிறகு நல்லதோர் ஆடையைத் தமக்கு அளிக்குமாறு கேட்டார். பைரவரின் தகாத செயலைக் கண்ட தேவலர் இன்னொரு ஆடையை அவருக்கு அளிக்க மறுத்தார். உடனே பைரவர் சிவபெருமானிடம் சென்று தமக்கு ஆடை கொடுக்க மறுக்கிறார் என்று கூறினார். பெருமான் தேவலரிடம் நடந்த செய்தியைக் கேட்டறிந்து பைரவரை நோக்கி, " தேவலர் அளித்த ஆடைகளை நாங்களெல்லாம் மகிழ்ச்சியோடு ஏற்று உடுத்திப் போற்றினோம். நீயோ கொடுத்த ஆடையை மதிக்காது பெற்று கிழித்து எறிந்தனை. அதனால் இன்று முதல் நீ கிழிந்த ஆடையுமின்றி நிர்வாணமாய் இருக்கக் கடவை" என்று சபித்தார் சாபம் பெற்ற பைரவர் அங்கிருந்து நீங்கினார். திருமணம் நான்கு நாட்கள் நடைபெற்றன. வந்திருந்த யாவருக்கும் நான்கு நாட்களும் விருந்து உபசாரங்கள் நடைபெற்றன. நான்காவது நாள் திருமணத்துக்கு வந்திருந்த யாவரும், தேவலமன்னன் தம்பதிகளுக்கு ஆசி கூறி சூரிய தேவனிடம் விடைபெற்றுக்கொண்டு அவரவர் இருப்பிடம் சென்றனர். தேவலமன்னன், தானும் தன் மனைவியுமாக சில நாட்கள் அங்கு தங்கி இன்புற்றிருந்தார். அதன் பின் சூரியதேவன் அளித்த ஏராளமான சீர் வரிசைகளைப் பெற்றுக் கொண்டு தன்னுடன் தங்கியிருந்த மன்னர்களும் நால்வகைப் படைகளும் புடை சூழ்ந்து வர தேவதத்தையை அழைத்துக் கொண்டு சூரியதேவனிடம் விடைபெற்றுக் கொண்டு தமது நகர் அடைந்தார்.Friday, 20 June 2014
Friday, 23 May 2014
சுனாபன் வரலாறு :
நான் கின்னரரின் அரசன். ஒரு நாள் நான் என் மனைவியோடு கயிலைக்குச் சென்றேன். அம்மை அப்பர் தங்கியிருந்த புனிதமான அழகிய சோலைக்குள் மயக்க உணர்வோடு போனேன். அதன் புனிதத்தைக் கெடுத்தேன். இதை உணர்ந்த சிவபெருமான் சினங்கொண்டு என்னை நிலவுலகில் மனிதனாகப் பிறந்து பிறவிக் கடலில் வீழ்ந்து துன்புறுமாறு சபித்தார். சாபம் பெற்ற நான் சாப நீக்கம் வேண்டிப் பெருமானைப் பணிந்தேன். சிவபெருமானும் கருணை கூர்ந்து 'என்னுடைய மானதபுத்திரன் தேவல முனிவன் உலகநலங்கருதி அவதாரம் செய்கிறான். அவன் ஆமோத நகருக்கு வருவான். அவனை வரவேற்று அவனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடு. அப்போது உன் சாபமும் நீங்கும்' என்று அருள் செய்தார். சாபத்தின்படி நான் இந்நிலவுலகில் பிறந்து இந்நாட்டைப் புரக்கும் மன்னனாக இதுவரை வாழ்ந்து வந்தேன். தங்கள் வரவால் என் சாபம் நீங்கியது. இறைவன் ஆணைப்படி ஆட்சியைத் தங்களிடம் ஒப்படைத்து விட்டேன். இனி நான் என்னுடய நாட்டுக்குப் போகிறேன் என்று சொல்லி முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு மானிட உடம்பை அங்கேயே கிடத்திவிட்டு, தேவவடிவம் பெற்று அப்போது அங்கு வந்த விமானத்தின் மீது தன் மனைவியோடு வித்தியாதர உலகம் சேர்ந்தான். சுனாப மன்னனும் அவன் மனிவியும் விட்டுச் சென்ற பூத உடம்புகளுக்கு தேவலமுனிவர் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்தார். பின் ஆமோத நகரை செங்கோன் முறைப்படி நீதி வழுவாது நல்லாட்சி செய்து வந்தார்.
தேவலர் கருவிகள் பெற்றது :
ஆட்சியை ஏற்று செங்கோன் முறைப்படி ஆட்சி நடத்திய தேவலர் தாம் வந்த காரியத்தை நினைவு கூர்ந்தார். உடனே சுபுத்திமான், காரியதக்கன், நீதிவேந்தன், தீர்க்கதரிசனன் என்னும் நான்கு அமைச்சர்களையும் அழைத்து "நான் ஆடைகள் நெய்வதற்கு வேண்டிய கருவிகளை பெறுவதற்காக மயனிடம் செல்கிறேன். நான் வரும் வரை நாட்டை ஒழுங்காக ஆட்சி செய்யுங்கள்" என்று பணித்து விட்டு மேரு மலையை நோக்கிப் புறப்பட்டுப் போனார்.
கபிஞ்சலன் சாபம் களைந்தது :
காடும் மலையும் கடந்து செல்லும் போது ஒரு அடர்ந்த காட்டினிடைக் கொடிய சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டது. தேவலரைக் கண்டதும் அவர் மீது பாய்ந்து தாக்கியது. உடனே தேவலர் சிங்கத்தின் மீது பல அம்புகளை எய்து அதை வீழ்த்தினார். அப்போது சிங்கம் வீழ்ந்த இடத்தில் புனிதமான உடலோடு ஒருவன் ஒரு வானவூர்தியில் ஏறக்கண்டார். அதைக் கண்டு பெரிதும் வியப்புற்ற தேவலர் ' நீ யார்? ' என வினவினார். அவன் நான் குபேரனின் அலுவலரில் ஒருவன். என் பெயர் கபிஞ்சலன் என்பது. ஒரு நாள் நான் வேட்டைக்குப் போனேன். அங்கு அழகான மான் ஒன்றைக் கண்டேன். அதன் மீது அம்பை எய்தினேன். அம்பின் அடிபட்ட மான் காயமுற்று அருகிருந்த ஆசிரமத்திற்குள் பாய்ந்து ஓடியது. அது கௌதம முனிவரின் ஆசிரமம் ஆகும். நான் அடிபட்ட மானைத் துரத்திக்கொண்டு ஆசிரமத்துக்குள் போனேன். அடிபட்ட மானையும் அதைத் தொடர்ந்து என்னையும் கண்ட கௌதம முனிவர் பெரிதும் சினங்கொண்டு என்னைச் சிங்கமாக ஆகுமாறு சபித்தார். சாபத்தைப் பெற்ற நான் அச்சமுற்று முனிவரை வணங்கி மன்னிக்குமாறும் சாபவிமோசனம் அளிக்குமாறும் வேண்டினேன். அவரும் சினந்தணிந்து இரங்கி, தேவலமுனிவரால் உன்சாபம் நீங்கும் என்று அருளினார். சாபத்தால் சிங்கமாய்ப் பல விலங்குகளை அடித்துத் தின்று வந்த நான் இன்று தங்களால் சாபநீக்கம் பெற்றேன். தாங்கள் இக்காட்டின் வடக்கே மூன்று யோசனை தூரத்தில் உள்ள வாலகில்லிய முனிவர் ஆசிரமத்துக்குப் போய் அம்முனிவரை தரிசித்துக் கொண்டு உங்கள் பிரயாணத்தைத் தொடருங்கள். என்று கூறி விமானமேறி விண்ணிடை மறைந்தான்.
உருத்திர தனுவன் தேவருலகம் சேர்தல் :
அதன் பின் தேவல முனிவர் தமது பிரயாணத்தைத் தொடர்ந்தார். கங்கைக் கரையை அடைந்தார். இது சூரிய குலத்து வந்த பகீரதன், தன் முன்னோர்களான சகர மன்னர்கள் 100 பேர் தாம் பெற்ற சாபம் நீங்கி நற்கதி அடையத் தவமியற்றி உலகுக்குக் கொணர்ந்த புனற்கங்கையாகும். இது தன்னில் நீராடுவோரின் பாவங்களைப்போக்கி நற்கதி அடையச் செய்யும் புனிதமுடையது. இப்பெரும் புனற்கங்கையில் தேவலர் நீராடி நாட்கடன்களை முடித்துக் கொண்டு மூன்று நாட்கள் தங்கினார். பின் பிரயாணத்தை தொடங்கி வாலகில்லிய ஆசிரமத்தை அடைந்தார். ஆசிரமம் எங்கனும் ஏராளமான நறுமணப்பூக்கள் பூக்கும் மரங்களும் செடிகளும் நிரம்பி இருந்தன. மலர்ச்சோலையும் அழகிய வாவிகளும் நிரம்பிய அந்த ஆசிரமம் அமைதிச் சின்னமாய் இருந்தது. பகையே அங்கு இருக்கவில்லை. பாம்பும் மயிலும், சிங்கமும் யானையும், கழுகும் புறாவும் பகையின்றி அருகருகு இருந்து வசித்தன. வேத ஒலி ஒலித்தன. நாகணவாய்ப் பறவைகளும் வேதம் ஓதின. இவ்வாறு தெய்வமணம் கமழும் ஆசிரமத்துள் சென்ற தேவலர் வாலகில்லிய முனிவரை அணுகி வணங்கி, அவரது ஆசி பெற்று அவரருகே அமர்ந்தார். ஆசிரமவாசிகளின் நலம் பற்றி வினவினார். அதற்கு வாலகில்லிய முனிவர் எங்கள் யாக கர்மங்கள் சிவபெருமான் திருவருளால் செவ்வனே நடைபெற்று வருகின்றன. எனினும் அண்மையில் ஒரு துன்பம் நேர்ந்துள்ளது. இந்த வனத்தில் இரண்டு காததூரத்தில் ஒரு மலைக்குகையில் குண்டிகன் என்னும் அசுரன் வசிக்கின்றான். அவன், மலை போன்ற திரண்ட தோள்களும் கோரப்பற்களும் உடையவன். மூன்று உலகங்களையும் அழிக்க வல்ல சூலம் ஒன்றையும் ஏந்தி உள்ளான். பாபமே வடிவான அவன் அழிந்தாலன்றி நாங்கள் இங்கு அமைதியாக வாழமுடியாது. அவன் தவ வலிமையாலும் அடக்க முடியா வல்லமை உடையவனாயுள்ளான். முனிவர்களின் துன்பத்தைக் களைந்து காப்பது மன்னனின் கடமை அல்லவா? தாங்கள் தான் அந்த அசுரனை அழித்து இக்கானகத்தில் வாழும் எங்களுக்கு அமைதியைத் தேடித் தரவேண்டும் என்றார். இதைக் கேட்ட தேவலர் ' உங்கள் துயர் தீர அந்த அசுரனைக் கொன்று வருவேன்' என்று கூறி அவரிடம் விடை பெற்றுக் கொண்டு போர்க்கருவிகளை எந்தியவராய் போர்க்கோலம பூண்டு குண்டிகன் என்னும் அசுரன் இருக்கும் மலைக்குகையைத் தேடிச் சென்றார். குகையையும் அடைந்தார். அங்கு அசுரன் நாள் தோறும் பல உயிர்களைக்கொன்று தின்று எறிந்த பிணங்களும் எலும்புகளும் மலை போல் குவிந்திருக்கக் கண்டார். பெரிதும் திடுக்கிட்டார். " இந்த அசுரனை இப்போதே அழிப்பேன் " அது என் கடமை " என்றவாறு வில்லெடுத்து நாணேற்றி குணத்தொனி செய்தார். நாணொலி கேட்ட அசுரன் சினத்துடன் சூலபாணியாய் வெளியே வந்து தேவல முனிவரைக் கண்டு கடுமையாக எதிர்த்தான். தேவலர் பலவித ஆயுதங்களைக் கொண்டு அரக்கனோடு நீண்டநேரம் போரிட்டார். முடிவில் அர்த்தசந்திர பாணம் ஒன்றால் அரக்கனின் தலையை அறுத்து வீழ்த்தினார். அப்போது இறந்த அரக்கனின் உடம்பிலிருந்து வீரன் ஒருவன் வெளிப்பட்டு விமானம் ஒன்றில் ஏறக்கண்டார்.அதிசயித்து அவனைப் பார்த்து " நீ யார்? " என்று வினவினார். அவன் நான் விசாலமாபுரி மன்னன். உக்கிரதனுவன் என்பது என் பெயர். என்னுடைய நாட்டைத் துன்புறுத்தி வந்த விகடன் என்ற அரக்கனைக் கொன்றேன். அவனுடைய அண்ணன் கற்கடன் என்பவன் என்னைப் பழி வாங்கும் எண்ணத்தில் என்னிடம் கபடமாகச் சமையற்காரனாகச் சேர்ந்தான். ஒரு நாள் துர்வாச முனிவர் என்னைக் காண வந்தார். அவருக்கு அறுசுவை உண்டி அளிக்குமாறு சமையற்காரனைப் பணித்தேன். தூர்வாச முனிவர் முன்கோபத்துக்குப் பேர்போனவர். இதை அறிந்திருந்த கபட நாடக கற்கடன் அதுவே என்னைப் பழிவாங்குவதற்கு ஏற்ற தருணம் என்பதை ஓர்ந்து நரமாமிசத்தைச் சமைத்து தூர்வாச முனிவருக்குப் படைத்தான். இத்தீய செயலைக் கண்ட முனிவர் என்மீது சினங்கொண்டு நரமாமிசம் தேடி அலையும் அரக்கன் ஆகும் படி சபித்தார். நான் பெரிதும் துன்புற்று அவரை வணங்கிச் சாப விமோசனம் வேண்டிப் பணிந்தேன். அவரும் இரங்கித் தங்களால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருள் செய்தார். சாபத்தின் காரணமாய் அரக்கனாகி இதுவரை பல உயிர்களைக் கொன்றும் துன்புறுத்தியும் பாபச் சேற்றில் மூழ்கியிருந்தேன். கருணாமூர்த்தியாகிய தங்களால் இன்று நான் சாபவிமோசனம் பெற்றேன். விடை பெறுகிறேன் " என்று கூறி விமானமேறி விண்ணுலகம் சென்றான். பின் தேவலமுனிவர் வாலகில்லிய முனிவரிடம் சென்று அரக்கனைக் கொன்ற செய்தியை அறிவித்து அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வடக்கிருக்கும் மேருமலையை நோக்கிச் சென்றார். பன்னாள் நடந்து சென்று மேருமலையை அடைந்தார். அங்கிருக்கும் தேவதச்சன் என்னும் மயனைச் சந்தித்தார். அவரிடம் தாம் துணி நெய்வதற்கான உபகரணங்களைப் பெற்றுப் போக வந்ததாகக் கூறினார். தேவதச்சனும் மகிழ்ச்சியோடு துணி நெய்வதற்கு வேண்டிய படமரங்கள், பலகைகள், தோற்கேடயங்கள், பண்ணையங்கள், தண்டங்கள், நாடாக்கள், திரிகைகள், திருவட்டம், விடுவாய் முதலிய கருவிகளை அளித்து அவற்றின் பெருமையையும் கூறினார். படமரம் முதலிய கருவிகள் தேவைக் கேற்றவாறு குறுகவும் நீளவும் செய்யுமென்றும், நாடா, நூலை விரும்பிய நிறத்தில் அளிக்கும் என்றும் கூறி, எப்பகையையும் வெல்ல வல்ல வாளையும் எட்டு பாணங்களையும் அளித்தார். இவற்றை எல்லாம் நன்றிப் பெருக்கோடு பெற்றுக் கொண்ட தேவலர் அங்கிருந்து இடுக்கண் இன்றி நாடு திரும்பினார்.

Subscribe to:
Posts (Atom)